பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

 

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை” -(திருக்குர்ஆன்  51:56)

 

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்,

 

மனிதனை வணங்குவதற்காக அன்றி வேறு நோக்கத்திற்காக படைக்கவில்லை என்று இறைவன் சொல்கிறான் . தொழுகை மட்டுமல்லாமல் வாழ்க்கையை வணக்கமாக்கி கொள்வதுதான் இந்த வசனம் குறிப்பிட்டுள்ளது. நேர்வழி காட்டுக்குவதற்காக  மட்டும் இக்குர்ஆ னை இறைவன் இறக்கியுள்ளான் , மனித வாழ்க்கையின் முன்மாதிரியாக இறுதி இறைத்தூதர் முஹம்மது  நபி  (ஸல் ) அவர்களை அனுப்பினான் . மற்றும் பல நபிமார்கள் ,நல்லவர்களின் வரலாறுகளையும் நமக்கு பாடமாகவும், அறிவுரையாகவும் திருக்குர்ஆனில் இறைவன் சொல்லிக்காட்டுகிறான் .

 

இறைவணனின் உதவியால் கடந்த 20 ஆண்டுகளாக இஸ்லாமிய அழைப்பு பணி  மையம் மூலம்  பல ஆசிரியர்கள், பேச்சாளர்கள் ஆகியோர் முக்கியமான பல தலைப்புகளில் ஆற்றிய வகுப்புகள், பயிற்சி முகாம்கள், மற்றும் உரையாடல்களை இங்கு தொகுத்து பாடங்களாக  உருவாக்கியுள்ளோம்.

 

இப்பாடத்தில் உள்ளடக்கிய விஷயங்கள் ;

    • - தனி மனிதன் ஒழுக்கம்.
    • - சுய வளர்ச்சி(self development )
    • - தலைமைத்துவ திறமைகள்
    • - குடும்ப நிர்வாகம்
    • - சமுதாயத்தில் வாழும் முறை
    • - குழந்தை வளர்ப்பு முதல் இறப்பு வரை . மேலும் பல
    •  
    • நோக்கம்
    • இந்த ஆன்லைன் கோர்ஸ் மூலமாக நமது வாழ்க்கையை இஸ்லாத்தின் அடிப்படையில் மேம்படவேண்டும், உலக மக்கள் பயன் பெற வேண்டும் என்பததற்காக இப்பாடத்தை உருவாக்கியுள்ளோம் . மனிதனுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை இப்பா டத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று நாங்கள் கருதுகிறோம் . மேலும் இதன் மூலமாக இஸ்லாத்தின் மீது  ஒரு  பறந்த பார்வை நம் சமுதாயத்தில் வர வேண்டும் என்பதற்காகவும் பல கோணங்களில் வகுப்புகள் அமைந்துள்ளன என்று தெரிவித்து கொள்கிறோம் .

 

  • பேச்சாளர்கள் , நிர்வாகிகள் மற்றும் இதற்காக பணி ஆற்றிய அனைவருக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்கவேண்டும் என்று பிரார்த்திப்போம் ..
  •  
  • -உங்களுடைய கேள்விகள் மற்றும் கருத்துக்களை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. அனுப்பலாம் .
  •  

Topics